பொகவந்தலாவை, மாவெளி வனப்பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுவந்த வந்த ஐவரை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இன்று மதியம் ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைதானவர்கள், பொகவந்தலாவ இராணிகாடு, மற்றும் ஆல்டி தோட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்










