சத்தமாக மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் வீதியால் சத்தமாக மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று  கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தங்கேஸ்வரன் அபிலாஸ் என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles