” மலையக இளைஞர்கள் நன்றாக படித்துவிட்டால், தோட்டத்துக்கு வேலைக்குசெல்லமாட்டார்கள். அவ்வாறு செல்லாவிட்டால் தொழிற்சங்கம் நடத்தமுடியாது.
தொழிற்சங்கத்தை நடத்தமுடியாவிட்டால் சந்தாப்பணம் கிடைக்காது. இதன்காரணமாகவே மலையகத்தில் கல்வி உட்பட இதர துறைகளில் அபிவிருத்திகளை ஏற்படுத்தாமல் இருக்கின்றனர். இந்நிலைமையை நாம் மாற்றியமைப்போம்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.