சனத், மிலான் மற்றும் டான் ஆகியோரின் கைபேசிகளை CIDயில் ஒப்படைக்க உத்தரவு

மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோரின் கையடக்க தொலைபேசிகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைத்தொலைபேசிகள் கையளிக்கப்படும் வரை சந்தேகநபர்களை நீதிமன்றில் தடுத்து வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலான கமகே மேலும் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தொலைபேசிகளை கையளித்த பின்னர் குறித்த சந்தேக நபர்களை விடுவிக்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Articles

Latest Articles