சனி கிரகம் அருகே இன்னொரு பூமி

சனி கிரகத்தின் அருகே இன்னொரு பூமியையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகமும் ஒரு சிறிய சூரிய குடும்பம் போன்றதுதான். சனி கிரகமானது 82 நிலவுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த 82 நிலவுகளில் டைட்டன் என்பது பூமியை போலவே தோற்றம் அளிக்கிறது. இந்த டைட்டனை இன்னொரு பூமியாகவே விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கருதுகிறார்கள்.

ஏனென்றால் இந்த டைட்டனில் ஆறு, குளங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலையும் இந்த டைட்டனில் இருக்கிறது. பூமியில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்த டைட்டனில் இருப்பதால் இதை பூமி 2.0 என்றும் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். பருவ நிலைகளால் இயக்கப்படும் உலகளாவிய மணல் சுழற்சியின் காரணமாக உருவான இந்த டைட்டனின் மேற்பரப்பில் உள்ள ஏரிகள் பூமியில் இருப்பதைவிட வெவ்வேறு பொருட்களால் நிரம்பியுள்ளன. திரவ மீத்தேன் நீரோடை டைட்டனின் பனிக்கட்டி மேற்பரப்பில் படிந்துள்ளன. நைட்ரஜன் காற்று ஹைட்ரோகார்பன் மணல் திட்டுகளை உருவாக்குகிறது.

டைட்டனின் தனித்துவமான குன்றுகள், சமவெளிகள் மற்றும் சமதளமான நிலப்பரப்புகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை ஸ்டான்போர்டு பல்கலைக்கழக புவியியலாளர் மேத்யூ வபோட்ரே தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு இப்போது வெளிப்படுத்தியுள்ளது.

புவி இயற்பியல் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி முடிவுகள் பருவகால சுழற்சி டைட்டனின் மேற்பரப்பில் துகள்களின் இயக்கத்தை எவ்வாறு இயக்குகிறது என்பதை காட்டுகிறது. மேலும் பருவ கால நீரோட்ட சுழற்சியுடன் பூமியின் அம்சங்களை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் நீண்டகாலமாக இந்த மர்மமான உலகத்தை பற்றி பேசி வருகிறார்கள்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles