சபாநாயகர் தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம்

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை முற்பகல் கூடவுள்ளது.

சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் இவ்வாரம் அவசரமாக கூட்டப்படவுள்ள நிலையிலேயே, நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றி ஆராய இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles