சப்புக்கஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகளை ஆரம்பிப்பதில் தாமதம்

கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீள ஆரம்பிக்கும் முயற்சிகள் நேற்று முன்தினம் (30) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அங்குள்ள கொதிகலன்களின் ஏற்பட்ட கோளாறு காரணமாக வேலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள கொதிகலன்களிலுள்ள (பொய்லர்) ‘டர்போ ஃபேன் ‘ குழாய்கள் வெடித்தன் காரணமாக எரிபொருள் சுத்திகரிப்பு பணிகளை ஆரம்பிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்

Related Articles

Latest Articles