சமுர்த்தி பட்டியல் மீளாய்வு செய்யப்படும் – ஜனாதிபதி!

தகுதியற்ற பலர் சமுர்த்தி கொடுப்பனவு பெறுகின்றனர் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சமுர்த்தி குறித்து பார்க்க வேண்டும். ஏராளமானோருக்கு சமுர்த்தி வழங்க வேண்டியுள்ளது. எனினும், அனைவருக்கும் வழங்க முடியாமல் இருக்கிறது. காரணம், பொருத்தமற்றவர்களும் சமுர்த்தியைப் பெறுகின்றனர். பொறுத்தமற்றவர்களை அப்புறப்படுத்தினால், தகுதியுடைய அனைவருக்கும் சமுர்த்தி வழங்க முடியும். சிலர், 20 வருடங்களாக சமுர்த்தி பெறும் பட்டியலில் இருக்கின்றனர். எனினும், இதனைத் தொடர்ந்து செய்ய முடியாது.

எனவே, தகுதியானவர்கள் யார் என்பதையும், புதிதாக யாரை இணைத்துக் கொள்ளவது என்பதையும் கண்டறிய வேண்டும். சிலர் இதனை அரசியல் செயற்பாடாக பார்க்கக்கூடும். எனினும், உண்மையில் சமூர்த்தி உதவி தேவையானவர்களுக்கு அதனை வழங்க வேண்டும். சமுர்த்தியைப் பெற தகுதியற்றவர்கள் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும். அனைவருக்கும் சமுர்த்தி வழங்க எமக்கு பணம் இல்லை. இந்த நிலைமையை நான் சொல்ல வேண்டும். இந்தப் பணிகள் சிரமமானவை என்றாலும் இதனைப் பொறுப்பேற்றுள்ளோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles