‘சமையலைக்குள் புகுந்து ‘கேஸ் சிலிண்டர், பால்மா கொள்ளை’

வத்துபிட்டிவல, மாத்தலான பிரதேசத்திலுள்ள வீடொன்றின் சமையலறைக்குள் புகுந்து எரிவாயு சிலிண்டர் மற்றும் பால்மா பக்கெட் உப்பட பெறுமதியான பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

கடந்த 10ஆம் திகதி அதிகாலை இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என  நிட்டம்புவ பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயுடன் கூடிய சிலிண்டர்,பால்மா பக்கெட், 2 ரைஸ் குக்கர்கள்,இரண்டு கத்திகள் ஆகிய பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
சமயலறைக்கு அருகிலுள்ள குளியலறையில் திறந்திருந்த ஜன்னலில் புகுந்து இந்தப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles