சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு செந்தில் தொண்டமான் வலியுறுத்து

சமையல் எரிவாயு விலை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டமையானது பாமர மக்களை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் உடனடியாக இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பிலான தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள செந்தில் தொண்டமான்,

நேற்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூபா 1,257 ஆல் அதிகரிக்க லிட்ரோ காஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பழைய விலை 1493 ரூபாவாகவும், புதிய விலை ரூ .2,750 ஆக உள்ளது. 5 கிலோ சிலிண்டரின் பழைய விலை ரூபாய் 598 ரூபாவாகவும், ரூ .503 ஆல் அதிகரித்து அதன்படி .1,101 ஆக உயர்ந்துள்ளது. 2.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் பழைய விலை 289 ரூபாவாகவும், 231 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 520 ரூபாவாக உயர்ந்துள்ளது.

இதேவேளை, லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் பழைய விலை 1856 ரூபாயாகவும், 984 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 2,840 ரூபாவாகும். 5 கிலோ எரிவாயுவின் பழைய விலை 743 ரூபாவாகவும்,393 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,136 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடம்பர பொருட்கள், விமானக் கட்டணங்களின் விலைகள்,வாகன வரிகள்,நட்சத்திர விடுதிகள் போன்றவற்றின் செலவீனம் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டால் இதன் தாக்கத்தை பொருளாதார ரீதியாக உயர்வானர்களே எதிர்கொள்ள நேரிடும். ஆனால், எரிவாயுவின் விலை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளமை சாதாரண பாரமர மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. அவர்களுக்கு இந்த இமாலய விலை அதிகரிப்பை ஒருபோதும் எதிர்கொள்ள முடியாது.

பொது முடக்கம் காரமாண தினக்கூலி வேலையில் ஈடுபட்டவர்கள் தொழில் இன்றி பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள சூழலில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மேலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். இந்த நவீன காலத்தில் மக்கள் மீண்டும் விறகு அடுப்பை நோக்கி நகர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரு நாடானாது பாமர மக்கள் சாதாரணமாக வாழ ஏற்புடையதாக இருக்க வேண்டும், மக்கள் சுமைகள் இன்றி சுமூகமான வாழ்க்கை முறையை வாழக்கூடிய நிலைப்பாடு காணப்பட வேண்டும் ஆகவே, உடனடியாக இந்த விலை அதிகரிப்பை இரத்து செய்ய வேண்டுமெனவும் செந்தில் தொண்டமான் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles