தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொழில் அமைச்சில் இடம்பெற்றது.
இப்பேச்சுவார்த்தையின் போது முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்மொழியப்பட்ட சம்பள தொகை மற்றும் ஊதிய மாதிரி திருப்திகரமாக இல்லை எனவும், அது தற்போதைய வாழ்வாதார நிலைமைகளுக்கு போதுமானதாக இல்லை எனவும் தொழிற்சங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும் கூட்டு உடன்படிக்கையின் முக்கிய பங்குதாரராக இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முதலாளிமார் சம்மேளனம் சமர்ப்பித்த தோட்ட தொழிலாளர்களின் சம்பள தொகை மற்றும் ஊதிய திட்டத்தை கடுமையாக எதிர்த்ததுடன், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், சம்பளப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு தேர்தலின் போது வாக்குறுதியளித்தபடி ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் எனவும் இ.தொ.கா வலியுறுத்தியுள்ளது.