சஜித்துக்கு தலையிடி! சம்பிக்க தனிவழி!!

Update-

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கபோவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

………

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்பட தீர்மானித்துள்ளார் என தெரியவருகின்றது.

நாரஹேன்பிட்டியில் உள்ள 43 ஆம் படையணி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி இது தொடர்பில் இன்று அல்லது நாளை அவர் விசேட அறிவிப்பொன்றை விடுப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, அமைச்சு பதவியை ஏற்குமாறு பிரதமர் விடுத்த அழைப்பையும் சம்பிக்க நிராகரித்துள்ளார்.

எதிரணியில் இருந்து அரசுக்கு ஆதரவு வழங்க அவர் உத்தேசித்துள்ளார்.

Related Articles

Latest Articles