சர்வக்கட்சி அரசில் இணையுமா ஜே.வி.பி.? செவ்வாயன்று ஜனாதிபதியுடன் பேச்சு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் , அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

சர்வக்கட்சி அரசு மற்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

சர்வக்கட்சி அரசு தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்திவருகின்றார். இதன் ஓர் அங்கமாகவே மேற்படி சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles