சர்வக்கட்சி அரசை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்து!

அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சு நடத்தி சர்வ கட்சி அரசை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான்கு பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கடித மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமான்ய பீடங்களின் மகாநாயக்க தேரர்களே ஜனாதிபதிக்கு நேற்று அது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

இதற்கமைய சர்வ கட்சி அரசை உருவாக்கும் போது ஜனாதிபதி மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களும் இணக்கம் காண வேண்டிய விடயங்களும் குறித்த கடிதத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரதன்மையை நாட்டில் ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை அமுலாக்கல், ஆறு மாதங்களுக்கு சர்வக்கட்சி அரசை அமைத்தல், அமைச்சரவை எண்ணிக்கையை 15 ஆக குறைத்தல் உட்பட 10 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles