‘சர்வக்கட்சி மாநாட்டில் ம.ம.மு. பங்கேற்கக்கூடாது – கட்சி தலைவரிடம் கோரிக்கை விடுப்பு’

” அரசால் நடத்தப்படும் சர்வக்கட்சி மாநாட்டில் மலையக மக்கள் முன்னணி பங்கேற்கக்கூடாது என கட்சி உறுப்பினர்கள் கட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.” – என்று மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி சர்வக்கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையிலேயே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க வேண்டாமென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணனிடம், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் கட்சி மட்ட கலந்துரையாடலின் பின்னர் முடிவெடுக்கப்படும்.

நாட்டில் பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. மக்கள் அன்றாடம் பாரிய இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.நாட்டையும் நாட்டு மக்களையும் சீர்குழைத்து நாட்டை சுடுகாடாக்கி வைத்திருக்கும் இவ்வரசாங்கம் வெளியேற வேண்டுமே தவிர சர்வகட்சி மாநாட்டை கூட்டி எவ்வித பிரயோசனமும் கிடையாது.” – என்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles