சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஐ.ஓ.எம். அலுவலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.