பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்தது.
இந்த நிலையில் தற்போது கேன்ஸ் நகரத்தில் நடைபெற்ற மற்றொரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம் என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. மேலும் இத்தாலியில் நடைபெற்ற ஓதிஸ்மோஸ் திரைப்பட விழாவில் இப்படத்துக்கு கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம் என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
