இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது கருஜயசூரிய போட்டியிட்டிருந்தால் தமது வேட்பாளரை தேசிய மக்கள் சக்தி விலக்கிக்கொள்ளவிருந்தது என முன்வைக்கப்படும் கருத்தை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். எமது அணியே முதலாவதாக மக்கள் மத்தியில் வேட்பாளரை அறிவித்தது. பின்வாங்குவதற்காக இருந்தால் எதற்காக அறிவிப்பு விடுக்கவேண்டும்?
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடன் எமக்கு எவ்வித அரசியல் டீலும் கிடையாது. மக்களுக்காக கொள்கை அடிப்படையிலேயே அரசியல் நடத்திவருகின்றோம். மக்கள் பக்கம்நின்று தீர்மானங்களை எடுப்போமேதவிர சலுகைகளுக்காக ஒருபோதும் அடிபணிந்து முடிவுகளை எடுத்ததில்லை. இனி எடுக்கபோவதுமில்லை.
நாம் உயிரை பணயம் வைத்து அரசியல் நடத்துகின்றோம். ஆனாலும் எமது பயணத்தை தடுப்பதற்கும், மக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்புவதற்காகவுமே என்ஜிஓ, டொலர் போன்ற கதைகள் எல்லாம் கூறப்பட்டுவருகின்றன.
நாடாளுமன்றத்தில் நாம் பலமான சக்தியாகவேண்டும். அதற்கான ஆணையையே மக்களிடம் கேட்கின்றோம்.” – என்றார்.