சவூதி பயணம் பாதியில் ரத்து: டில்லி திரும்பினார் மோடி!
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக, சவூதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அவசரமாக டில்லி திரும்பினார்.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சவூதி அரேபியா சென்றிருந்தார். நேற்று சென்ற அவர், பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு டில்லி திரும்புவதாக இருந்தது.
ஆனால், காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி தனது சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவு சவூதியில் இருந்து கிளம்பினார்.
தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி டில்லி திரும்பினார். டில்லியில் இன்று அவர், பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டத்தை கூட்டி உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.