பெண்களுக்கான 400 மீற்றர் தடை ஓட்டப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு பதக்கங்களை வெற்றி கொண்ட கௌசல்யா மதுஷானி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தடகளப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குளியாபிட்டி பகுதியைச் சேர்ந்த கௌசல்யா மதுஷானி தற்கொலை முயற்சி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கான 400 மீற்றர் தடை ஓட்டப் போட்டிகளில் 2014, 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பல்வேறு சர்வதேச பதக்கங்களை அவர் வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.