கல்விப் பாதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளைப் 10 ஆண்டில் நடத்துவது குறித்தும் உயர்தரப் பரீட்சைகளை 12ஆம் ஆண்டில் நடத்துவது குறித்தும் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள் தரம் 13 வரையான கல்வி செயற்பாடுகளை தரம் 12 வரை மட்டுப்படுத்துவதும் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பின்னர், பெறுபேறுகளை எதிர்பார்த்து மாணவர்கள் பல மாதங்கள் காத்திருப்பதனை கருத்திற் கொண்டே, இந்த விடயம் தொடர்பாக தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்ன.
எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை, தரம் 10 ல் நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை, தரம் 12ல் நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இலங்கையில் நடைமுறையில் உள்ள கல்வி முறையில் முழுமையான மாற்றம் வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.