ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், சாமர சம்பத் தசநாயகவுக்கு முகநூல் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த முகப்புத்தகத்தில் ” நீ இன்னும் உயிருடன் இருக்கிறாயா? எமது பட்டியலில் நீயும் இருக்கின்றாய்.” என பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சாமர சம்பத் தசநாயகவின் ஆலோசனைக்கு அமைய, அவரின் செயலாளரினால் ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ராமு தனராஜா
