சாரதி அனுமதி பத்திரத்துக்கான பரீட்சை – பரீட்சைகள் திணைக்களத்தின் கண்காணிப்பில் நடத்த திட்டம்!

சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான எழுத்து மூல பரீட்சையை பரீட்சைகள் திணைக்களத்தின் கண்காணிப்பில் கீழ் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 

அடுத்த வருடம் முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் தோற்றியதன் பின்னர் அதிகமானோர் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்காக கோரிக்கை விடுப்பதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கிணங்க, தாம் வதியும் இடத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான எழுத்துமூல பரீட்சையில் தோற்றும் சந்தர்ப்பம் விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாளாந்த சேவைகளைப் பெறுவதற்கு, முன்னதாகவே நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles