சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க லண்டன் பறந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (04) அதிகாலை இங்கிலாந்து பயணித்துள்ளார்.

பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதியுடன் மேலும் 8 பேர் நாட்டிலிருந்து பயணித்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles