‘சாவிகொத்து’ அரசியல் நடத்தும் இ.தொ.கா! வேலுகுமார் சுட்டிக்காட்டு

“மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள சிலருக்கு ‘சாவி கொத்து’ கையளிக்கப்பட்டிருந்தாலும், சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. இதனால் தனி வீட்டில்கூட சுதந்திரமாக, நிம்மதியாக வாழமுடியாத நிலைமை இன்று பயனாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நல்லாட்சியின்போதே மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தனிவீட்டுத் திட்டம் துரிதப்படுத்தப்பட்டது. வீட்டுரிமை மற்றும் காணி உரிமை என சகலவித உரிமைகளையும் பயனாளிகள் அடையும்வகையில் ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன.

அதேபோல் நான்கு வருடங்கள் என்ற குறுகில காலப்பகுதிக்குள் மேலும் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்ட தனிவீட்டுத் திட்டமானது, ஆட்சிக்கவிழ்ப்பு சூழ்ச்சி உள்ளிட்ட சில விடயங்களால் முழுமைப்படுத்த முடியாமல்போனது. அதன்பின்னர் ஆட்சிமாற்றமும் ஏற்பட்டது.

ஆட்சிமாறினாலும் அரச நிர்வாகப் பொறிமுறை என்பது மாறாது. எனவே, முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளை தொடர்ந்தும் முன்னெடுத்து முழுமைப்படுத்த வேண்டிய பொறுப்பு ஆட்சிக்குவரும் தரப்புக்கு இருக்கின்றது.

அந்த வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஆரம்பிக்கப்பட்டு முடிவுறும் தறுவாயில் இருந்த வீடுகள், முழுமைப்படுத்தப்பட்டு, வீடு, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என நம்பினோம். பெரும்பாலான வீடுகளுக்கு இந்த ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவில்லை. முழுமைப்படுத்தப்படாமலேயே வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

நாம் விதைக்க அதனை மாற்றுதரப்பு அறுவடை செய்தாலும் அதன்மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவேண்டும். ஆனால் முழுமைப்படுத்தப்படாமலேயே வீடுகள் கையளிக்கப்பட்டு ‘சாவி கொத்து’ அரசியல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles