சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்க அனுமதி கோரும் கோட்டா

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அவர் இந்த மாதம் இறுதிவரை சிங்கப்பூரில் தங்கியிருக்கும் வகையில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்குச் சிங்கப்பூர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று அரசியல் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ‘முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடு திரும்புவதற்குப் பொருத்தமான நேரம் இதுவல்ல. அவர் இந்த நேரத்தில் நாட்டுக்கு வந்தால் அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படலாம்’ – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்குக் கடந்த வாரம் வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இதற்கு உள்நாட்டு ஊடகங்களிடம் பதிலளித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி., ‘கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினால் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்குத் தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்’ – என்று கூறியிருந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles