சிட்னியில் தேவாலயத்துக்குள் கத்திக்குத்து தாக்குதல் – நால்வர் காயம்

ஆஸ்திரேலியா, சிட்னி மேற்கு பகுதியில் உள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் கிருஸ்தவ மதகுரு உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி தேவாலயத்தில் இன்றிரிவு ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கிருஸ்தவ மதகுருமீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 20, 30, 50 மற்றும் 60 வயதுகளுடைய நபர்கள் காயமடைந்துள்ளனர். தேவலாயத்தில் ஆராதனைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கறுப்பு நிறை ஆடையில் வந்த நபரே தாக்குதலை நடத்தியுள்ளார்.

சிட்னியில் வணிக வளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்று 48 மணிநேரத்துக்குள் மீண்டுமொரு கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளமை சிட்னியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles