சிரியாவில் இடைக்கால அரசு: புதிய பிரதமர் தெரிவு!

சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவர் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே முக்கியத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் தேதி வரை இடைக்கால அரசு செயல்படும் என்று அறிவித்தார்.

அபு முகமது அல் கோலனி (Abu Mohammed al- Golani) தலைமையிலான கிளர்ச்சி படைகள், கடந்த சில நாள்களாக முன்னேறி, தலைநகர் டமாஸ்கஸை கடந்த 8 ஆம் தேதி அடைந்தன. அப்போது அந்நாட்டு அதிபர் பஷார் அசாத், ரஷ்யா தப்பிச் சென்றார். இப்படியான சூழலில், சிரியா தங்கள் கட்டுபாட்டுக்குள் வந்ததாக கிளர்ச்சி படைகள் அறிவித்த நிலையில், அரசாங்கம் கிளர்ச்சிப் படைகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

Related Articles

Latest Articles