புத்தல பகுதியில் 14 வயதான சிறுமியை கடத்திச்சென்ற நால்வருக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நால்வரும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன்னர் சிறுமியின் வீட்டிற்கு சென்ற சந்தேகநபர்கள், தந்தையை தாக்கிவிட்டு சிறுமியை கடத்திச்சென்றுள்ளனர்.
கட்டுகல்லகே பகுதியில் உள்ள வீடொன்றின் நிலக்கீழ் அறைக்குள் சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த போது, பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.