மேல் மாகாணத்தில் முதல் விசேட தேடுதல் ஆரம்விக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிவதற்காக விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தொழிலுக்கு அமர்த்தப்பட வேண்டிய வயதெல்லையை விட குறைந்த வயதுடையவர்களை வேலைக்கு வைத்துள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடுமையாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட சன நெரிசல் மிக்க பிரதேசங்களில் சிறுவர்களை வீட்டு வேலைக்கோ, தொழிலுக்கோ ஈடுபடுத்தப்பட்டிருப்பதை அறிந்தால் 0112 – 333334 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறையிடுமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசேட தொலைபேசி இலக்கம்
0112 – 333334