‘நவ நிதாஸ் பக்சய’ எனும் பெயரில் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, அக்கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இதன் ஓர் அங்கமாக சிறு கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்திவருகின்றார். கூட்டணி அமைக்கும் நோக்கிலேயே சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது. மலையகத்தில் உள்ள சிறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரபா கணேசன், மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோரை அழைத்து அவர் பேச்சி நடத்தியுள்ளார்.ஏனைய சிறு கட்சிகளின் பிரதிநிதிகளையும் விரைவில் சந்திக்கவுள்ளார்.










