‘சிறைச்சாலை கொத்தணி’ – தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,091 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உருவான சிறைச்சாலை கொத்தணிமூலம் இதுவரை ஆயிரத்து 91 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று இதுவரையில் 183 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இவர்கள் அனைவரும் மஹர சிறைச்சாலையில் உள்ளவர்கள்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இதுவரை 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, 58 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 06 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளுள் இதுவரை 113 கைதிகள் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles