தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கேள்வி அதிகரித்து வரும் நிலையில். பலரும் தமக்கு தேவையான சிலிண்டர்களை கொள்வனவு செய்வதிலும் பார்க்க மேலதிகமாக சிலிண்டர்களை சேமித்து வைத்துக் கொள்ளவே முயற்சிக்கின்றனர்.
அந்த வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்திருக்கும் நிலையில் ஒரு சிலர் உமி, மரத்தூள் விறகு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்பினை பயன்படுத்தி சமையல் வேலைகளை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக தம்மிடம் இருக்கும் வெற்று சிலிண்டர்களை விற்பனை செய்வதற்கும் தயாராக வருகின்றனர்.
அதேசமயம் சிலிண்டர்களை திருடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன . குறிப்பாக கடந்த சில தினங்களாக தலைவாக்களை பிரதேசத்தில் மூன்றிற்கும் அதிகமான சிலிண்டர்களை களவாடும் கும்பல் ஒன்று நடமாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் தலவாக்கலை பிரதேசத்தில் வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த சிலிண்டரை குறிப்பிட்ட குழுவினர் களவாடி சென்று பெரிது ஒரு நபருக்க விற்பனை செய்ய முயற்சித்த போது கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியது.
சம்பந்தப்பட்ட நபர்களை பாதுகாப்பு தரப்பினர் கடுமையான எச்சரிக்கையுடன் விடுவித்துள்ளதாகவும் தகவல் . எனவே தலவாக்கலை நகரம் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசத்தில் வாழும் மக்கள் தம்மிடம் இருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரம் அன்று மின் உபகரணங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஆறும் இனம் தெரியாதவர்களை தமது வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் பலரும் வேண்டுகோள் விடுகின்றனர்.
அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன் லிந்துலை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து 9 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் மின் உபகரணங்கள் பல களவாடப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
கெளசல்யா










