சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை ஆரம்பிப்பதை முன்னிட்ட கலந்துரையாடல் நேற்றுக் காலை 10 மணிக்கு சிவனெளிபாத மலைக்கு பொறுப்பான சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் பெங்கவேததம்மின்ன தேரர் தலைமையில், நல்ல தண்ணி சுகாதார அத்தியட்சகர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலில் நுவரெலிய மாவட்ட அரச அதிபர், அம்பகமுவ பிரதேச செயலாளர், ஹற்றன் வலய பொலிஸ் அத்தியட்சகர், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர், ஹற்றன், வட்டவளை, கினிகத்தேனை, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, போகவாந்தலாவ பொலிஸ் நோர்வூட், மஸ்கெலியா, நல்ல தண்ணி போன்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடிப்படையினர், மவுசாகலை சந்தியில் உள்ள இராணுவத்தினர், வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார அதிகாரிகள், கிராம சேவகர்கள், தேசிய நீர் வடிகாலமைப்பு அதிகாரிகள, வன பாதுகாப்பு,மின்சாரத்துறை, தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து அதிகாரிகள்,பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் மற்றும் நல்ல தண்ணீர் வர்த்தகர்கள், விடுதி உரிமையாளர்கள், சிவனொளிபாத மலைக்கு பொருட்களைக் கொண்டு செல்வோர் ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய நுவரெலியா மாவட்ட அரச அதிபர்
2021/ 2022 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகாலம் யாத்திரை எதிர்வரும் 18ஆம் திகதி பௌர்ணமி தினம் ஆரம்பமாக உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமகா விகாரையின் தேரரினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
எதிர்வரும் 17ஆம் தேதி வரும் சுப நேரத்தில் இரத்தினபுரி கல்பொத்த ரஜமஹா விஹாரையில் இருந்து மூன்று வழிகளில் சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.










