சிவனொளிபாத மலைக்கு தரிசனம் வந்து குழந்தை பிரசவிப்பு

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

இரத்தினபுரி பகுதியில் இருந்து வந்த 32 வயதுடைய பெண் சிவனொளிபாத மலை ஏரிக் கொண்டிருந்த வேளையில், ஊசி மலைப் பகுதியில் வைத்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவ்விடத்திலேயே பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

பின் அவரது குடும்பத்தினர் நல்லதண்ணி பொலிஸாரின் உதவியுடன் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles