மாகாணசபைத் தேர்தலில் வேட்பு மனு வழங்குவது தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குழுவொன்றை அமைத்துள்ளது.
அத்துடன், மேலதிகமாக இரு உப தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்களுக்கு இப்பதவி வழங்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்துக்குள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயல்படக்கூடிய விடயங்களைக் கையாள்வதற்குரிய பொறுப்பு டிவி சானக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.










