கெஞ்சுவது எங்கள் குணம் அல்ல: ட்ரம்புக்கு ஈரான் பதிலடி

அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு ஈரான் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் எஸ்மைல் பாகே (Esmail Baghaei) தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் (Mike Waltz) கூறுகையில், பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில் டொனால்ட் ட்ராம்ப் தற்காலிகமாகத் தாக்குதல்களை நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ உட்பட அமெரிக்க அதிகாரிகள், “ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்காகக் கெஞ்சிக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த பேச்சாளர் எஸ்மைல் பாகே:

“மத்தியஸ்தர்கள் மூலம் இரு தரப்பிற்கும் இடையே செய்திகள் இன்னமும் பரிமாறப்பட்டு வருகின்றன; ஈரான் ராஜதந்திர வழிகளைக் கைவிடவில்லை. ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் கோரிக்கை விடுத்துள்ளதாக வரும் செய்திகள் முற்றிலும் புனையப்பட்டவை. பேச்சுவார்த்தைக்காகக் கெஞ்சுவது எங்களது குணமே (DNA) அல்ல.”
என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles