சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், சீனாவின் சைனோ பார்ம் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் சீனாவில் தயாரான தடுப்பூசிக்கு முதல்முறையாக உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதே சமயம் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்ற 6-வது தடுப்பூசி இதுவாகும்.
சீனாவின் சைனோ பார்ம் தடுப்பூசியின் செயல்திறன் 79 சதவீதம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மற்ற தடுப்பூசிகளைப் போலவே இதுவும் 3 முதல் 4 வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 22 நாடுகள் இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பும் ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.










