மூன்றாவது பதவிக்காலத்துக் காகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அவரது தலைமையில் சீனா அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டினார்.
இலங்கையின் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாட்டில் சீனா அளித்துவரும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, சீன ஜனாதிபதியின் புதிய பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என நம்பிக்கை தெரிவித்தார்










