கண்டி உட்பட 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
வெள்ளம் மற்றும் மண்சரிவால் இருவர் பலியாகியுள்ளனர். இரு வீடுகள் முழுமையாகவும் 117 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
64 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. 4 பாதுகாப்பான இடங்களில் 264 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
