சீரற்ற காலநிலையால் 5,821 பேர் பாதிப்பு! நால்வர் பலி!!

நாட்டில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தாலேயே மேற்படி உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பதுளை, புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஆகிய 10 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவுகின்றது.

ஆயிரத்து 451 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வீடுகள் முழுமையாகவும், 410 வீடுகள் பகுதியவும் சேதமடைந்துள்ளன.

Related Articles

Latest Articles