இலங்கையில் 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 13 ஆயிரத்து 102 குடும்பங்களைச் சேர்ந்த 51 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
வெள்ளம் மற்றும் மண்சரிவால் மூவர் பலியாகியுள்ளனர். இருவர் காணாமல்போயுள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். 5 வீடுகள் முழுமையாகவும் 300 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
ஆயிரத்து 616 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. 34 பாதுகாப்பான இடங்களில் 5 ஆயிரத்து 178 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
