சீரற்ற வானிலை-நுவரெலியா மாவட்டத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையினால் பல பிரதேசங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது . கடும் மழையினால் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் நீரில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்கள்.
 
இந்த மழையினால் நுவரெலியா மாவட்டத்தில் 254 குடும்பங்களைச் சேர்ந்த
648 பேர் பாதிக்கப்பட்டு முகாம்களிலும் உறவினர்கள்  நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
 
என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (2) செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். 
 
அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், மழையினால் பாதிக்கப்பட்டு முகாம்களிலும் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருப்பபவர் களுக்கு உணவுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
அதே வேளை உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக அவர்களுக்கு தேவையான நிதி வழங்க ஏற்பாடுகள்  மேற்கொள்ளப் பட்டுள்ளது. காணமல் போனவர்களை தேடும் பணியிலும் தற்பொழுது ஈடுபட்டுள்ளோம்.அத்தோடு பாதிக்கப்பட்ட வீடுகள் புனரமைப்பதற்கும் அரசாங்கத்தில் நிதி ஒதுக்கி சம்பந்தப்பட்டவர்களுக்கு பெற்று கொடுக்கவும்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பாலும் அம்பகமுவ,  கொத்மலை , தலவாக்கலை மற்றும் நுவரெலியா பிரதேசங்களிலே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழை பெய்வதால் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவர்களின் வேண்டுக்கோளுக்கமைய
நேற்று நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.
 
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் எரிப்பொருள் மின்சக்தி அமைச்சும் எரிப்பொருள் கூட்டுத்தாபனமும் QR முறையில் வாகனங்களுக்கு எரிப்பொருள் வழங்கும் திட்டத்தை நேற்று முன் தினம் (1) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது வாரத்தில் ஒருநாள் மாத்திரம் அந்த வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் பெற்றுக்கொள்ளலாம்
 
விசேடமாக நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் உருளைக் கிழங்கு மரக்கறிககள் இலங்கை முழுவதும் கொண்டு செல்லப்படுவதால் தினந்தோறும்
மரக்கறிகளை ஏற்றி செல்லும் லொரி வாகனங்களுக்கு தினந்தோறும் 100 லீட்டர்
டீசல் தேவைப்படுகிறது. அந்த வாகனங்களுக்கு டீசல் இலங்கை போக்குவரத்து சபை டிபோ மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எரிப்பொருள் தட்டுபாட்டை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட செயலாளர் நந்தன கலபட மேலும் தெரிவித்தார்.
 
டி சந்ரு

Related Articles

Latest Articles