பதுளை மாவட்ட சுகாதார பணியாளர்கள் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார மருத்துவ ஆய்வுகூட வல்லுநர்கள் , செவிலியர்களின் நிறைவுகாண் சுகாதார வல்லுநர்கள் மற்றும் சுகாதார துணை வல்லுநர்கள் இணைந்தே இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார நிபுணர்களின் சம்பள முரண்பாடு, பட்டதாரிகளின் சம்பளம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுதல் உட்பட ஏழு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பதுளை வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமான பேரணி, மாகாணசபைவரை சென்றது. அங்கு வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ராமு தனராஜா