“கொவிட் – 19” வைரஸ் பரவல் தொடர்பில் சமுகத்தில் வதந்திகள் பரப்பட்டுவருகின்றன. எனவே, போலித்தகவல்களை நம்பவேண்டாம், பரப்பவேண்டாம் என்று இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” கொரோனா வைரஸால் நாட்டில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும், நாடு முடக்கப்படும் என்றெல்லாம் கருத்துகள் பரப்பட்டுவருகின்றன. வீண் அச்சத்தை ஏற்படுத்தும் விதத்திலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. எனவே, வதந்திகளை நம்பவேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்படும் தகவல்களை மட்டும் ஏற்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அதேவேளை, சமூகஇடைவெளி, முகக்கவசம் அணிதல் உட்பட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். எம்மிடம் ஒளிப்பதற்கு ஒன்றும் இல்லை.
அத்துடன், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கவேண்டியே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். எனவே, சுகாதார தரப்புகளால் வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றுமாறு நாம் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.