சுசில் பிரேமஜயந்தவின் பதவி பறிப்பு!

சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உள்ள அதிகாரங்களின் பிரகாரம் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அரசை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்துவருகின்றார். முடிவெடுக்கும் இடத்தில் தகுதியானவர்கள் இல்லை எனவும் நேற்று முன்தினம் அரசை சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles