சுதந்திரக் கட்சிக்குள் பெரும் குழப்பம்: தாய்லாந்து பறந்தார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை தாய்லாந்து நோக்கி பயணமாகியுள்ளார். மைத்திரியுடன் மேலும் ஒன்பது பேர் பயணித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தவிசாளர் பதவியை வகிக்க மைத்திரிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் பதில் தவிசாளராக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனம் சட்டவிரோதம் என மைத்திரி தரப்பு கூறியுள்ளது.

இதற்கிடையில் சு.கவின் தலைமையகத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இன்று காலை பதில் பொதுச்செயலாளர் துஷ்மந்த மித்ரபால தலைமையிலான குழுவொன்று அங்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Articles

Latest Articles