ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் விரைவில் கட்சியுடன் இணைந்து பயணிப்பார் என்று சு.கவின் உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார் .
” ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் சந்திரிக்கா அம்மையார் பங்கேற்காவிட்டாலும் 18 பிரதிநிதிகளை அவர் அனுப்பி வைத்திருந்தார்.
சுதந்திரக்கட்சி விரைவில் நல்ல நிலைக்குவரும். சந்திரிக்கா அம்மையாரும் அப்போது கட்சியில் இணைவார்.
அதேபோல தயாசிறி ஜயசேகரவும் சுதந்திரக் கட்சியை விட்டுபோகக்கூடாது. அவர் கட்சியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.










