ஜனாதிபதி தேர்தலின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று 10 கட்சிகளின் கூட்டணி இன்று அறிவித்தது.
விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உட்பட நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் ஊடக சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.
இதன்போதே சுயாதீன அணிகளின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.
