சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் எனவும், நீதி நடவடிக்கைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை எனவும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் தொடர்பான உறுதிமொழி தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளது. அதனையே செய்கின்றோம். இதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டு, நடவடிக்கை இடம்பெறுகின்றது.விரைவில் அது ஸ்தாபிக்கப்படும். சட்டமா அதிபர்மீது நம்பிக்கை இல்லை என்பதால் நாம் இதனை செய்யவில்லை. அவரை நம்புகின்றோம்.
வெளிநாட்டு ஒத்துழைப்பு பெறுவதாக இருந்தால் பெறமுடியும். ஆனால் எமது நாட்டில் சிஐடியினருக்கு விசாரணைகளை முன்னெடுக்க முடியும். வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை. எமது நீதிபதிகளால் அதனை செய்ய முடியும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.